பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், கிறிஸ்தவ அன்பில் ஒற்றுமையாக நடக்கவும், இச் சபையின் முன்னேற்றத்திற்காக அறிவிலும் பரிசுத்தத்திலும் ஒருவரையொருவர் தேற்றுவதிலும், அபிவிருத்தியிலும், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காக பாடுபடவும், ஆராதனைகள் சபை ஒழுங்குகள், சபையின் கட்டுப்பாடுகள், கோட்பாடுகள் தொடர்ந்திருக்க செய்வதற்கும், ஊழியங்களுக்கு உதவவும், சபையின் தேவைகளுக்கு உதவவும், ஏழைகளை பராமரிக்கவும், எல்லா தேசத்திற்கும் சுவிசேஷம் பரப்பப்படுவதற்காகவும் நாம் சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் கிரமமாகவும் என்னால் இயன்றளவு உதவி செய்வோம் எனவும் நாம் உடன்படிக்கை செய்கிறோம்.
அத்துடன் குடும்ப ஜெபங்களையும், தனிப்பட்ட தியான நேரங்களையும் நடத்துவோம் எனவும் எமது பிள்ளைகளுக்கு சமய ரீதியிலான கற்பித்தலை வழங்கவும், எமது உறவினர்களையும் அறிமுகமானவர்களையும் இரட்சிப்புக்குள் கொண்டுவரவும், இந்த உலகத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவும், எமது நடக்கைகளில் நேர்மையாகவும் எமது அலுவல்களில் விசுவாசத்துடனும், எமது ஒழுக்கத்தில் மற்றவர்கள் எம்மைப் பின்பற்றத்தக்க வகையிலும், எல்லா வீண்பேச்சையும், புறங்கூறுதலையும், மிதமிஞ்சிய கோபத்தை விலக்கவும், போதையூட்டும் பொருட்களை பாவிப்பதையும் விற்பதையும் விட்டொழித்து எமது இரட்சகரின் இராஜ்ஜியத்தின் விருத்திக்காக பிரயாசப்பட ஆர்வமுள்ளவர்களாக இருக்கவும் உடன்படிக்கை செய்கிறோம்;;.
மேலும் நாம் ஒருவரையொருவர் சகோதர அன்புடன் காக்கவும், ஜெபத்தில் ஒருவரையொருவர் நினைவுகூரவும், வியாதியிலும், துயரத்திலும் ஒருவருக்கொருவர் உதவவும், கிறிஸ்தவ அனுதாப உணர்வை விருத்தி செய்யவும், பேச்சில் மரியாதையும், மனதிற்கு வருத்தத்தை உண்டுபண்ணும் கருத்துக்களை எடுக்காமல் இருக்கவும், சீர்பொருந்தி சமாதானப்பட்டு உறவாட எப்பொழுதும் தயாராக இருக்கவும், தாமதமின்றி எமது இரட்சகரின் பிரமாணத்தை காத்துக்கொள்ள கவனமாக இருக்கவும் உடன்படிக்கை செய்கிறோம்.
மேலும் நாம் இவ்விடத்திலிருந்து தேவ வழிகாட்டலின் அடிப்படையிலும், சபையின் ஆசியுடனும் வேறோர் இடத்திற்கு செல்லும்போது சாத்தியமான வரையில் அதிக சீக்கிரமாக கடவுளின் வார்த்தையின் கொள்கையையும், இந்த விசுவாசத்தையும், உடன்படிக்கையையும் கடைப்பிடிக்கும் ஒரு பப்டிஸ்ற் சபையில் இணைந்து கொள்வோம் எனவும் உடன்படிக்கை செய்கிறோம்.
பண்டாரவளை பைபிள் பப்டிஸ்ற் மிஷன், இல.4.1, நாசரன் வீதி, பண்டாரவளை.